• No products in the cart.

Apply to enroll
Duration

1 month, 1 week

குறைந்த நேரத்தில் அதிகமான வேலைகளை செய்ய வேண்டுமா ? இதோ உங்களுக்காகவே இப்பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.

Archives

Categories

  • No categories

நேர முகாமைத்துவம் (Time Management)

ஆலிமாக்களுக்காகவே தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி


😲 உங்களுக்கு எப்போதும் செய்யவேண்டிய வேலைகள் அதிகமாக உணரப்படுகிறதா ?

🤗 உங்கள் நேரத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்கான வழிகளைத் தேடுகிறீர்களா ?

🏇 குடும்பம்,வேலை,  மற்றும் சமூகப்பணி போன்றவற்றை ஆரோக்கியமான முறையில் முகாமை செய்ய வேண்டுமென்று நீங்கள் எண்ணுகிறீர்களா ?

🫥 நீங்கள் திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்ட நேரத்தில்  செய்ய முடியவில்லை என்பது உங்களுக்கு ஒரு பிரச்சினையா ?

இதோ உங்களுக்காகவே இப்பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.

😲 வாழ்க்கை ஒரு திட்டமிடல் இல்லாமல் செல்வதாக உணர்கிறீர்களா ? 

😞வருடங்கள் கடந்து விட்டது ஆனால் பெரிதாக எதுவும் செய்யவில்லை என்று எண்ணுகிறீர்களா ?


---------------------------------------------------------------------------------------------------------------


ஏன் நீங்கள் நேர முகாமைத்துவம் என்ற பாடநெறியினை தொடர வேண்டும்?

இன்றைய வேகமாகச் செல்லும் உலகில், நேர முகாமை என்பது மிக முக்கியமாகவும், அவசியமாகவும் உள்ளது. மிகுந்த பொறுப்புகளைத் தாங்கும் ஆலிமாக்களுக்கு, நேரத்தை சரியாகப் பயன்படுத்துவது அவசியமாகும். இதனால் அவர்கள் தங்கள் வேலைகள், குடும்ப பொறுப்புகள் மற்றும் சமூகப் பொறுப்புகளை சமநிலைப்படுத்த முடியும்.

நேர முகாமைத்துவம், உங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதில் மட்டுமல்லாது, உங்கள் மனநலனையும் மேம்படுத்த உதவும். இப் பாடநெறியானது ஆலிமாக்கள் தங்கள் சமூகத்திற்கு இன்னும் சிறப்பான முறையில் சேவைகளை வழங்க உதவும்.
இது நீங்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய வேலைகளை எளிதாகவும், சீராகவும் செய்ய உதவுகிறது. மற்றும் எளிமையான சுய மேலாண்மைத் தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகள் கற்றுக்கொடுக்கப்படும்.

முக்கியமாக, இது உங்களது மிக முக்கியமான பணிகளை முதலில் செய்யத் தூண்டும். உங்களுக்குப் பயன்தரும் குறிப்புகள் மற்றும் நடைமுறைகள் மூலம், நீங்கள் உங்கள் நேரத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளலாம். நேர முகாமை திறன்களானது வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றி அடைய உதவும்.

நீங்கள் மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான நேர முகாமைத்துவ தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வீர்கள். இதனால் உங்களின் வேலைகள், குடும்பம் மற்றும் சமூகப் பொறுப்புகள் அனைத்திலும் நீங்கள் வெற்றிபெறலாம்.


🥇உங்களுக்குத் தெரியுமா ?
ஆலிம்களுக்காக (ஆண்களுக்காக) தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறியினை ஆலிமாக்களுக்காக (பெண்களுக்காக)   மீள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.


ஆலிம்களுக்காக (ஆண்களுக்காக)

நேர முகாமைத்துவத்தில் பல ஆண்டு அனுபவமுள்ள மற்றும் கருத்தரங்குகளை பல நிறுவனங்களில் நடத்துபவர்

விரிவுரையாளர்

Abubakr Ismail 

Doctorate of Business Administration (R), MBA-UK , CPA, CIMA-UK, CGMA-USA, PGD IF –UK, AD in IT


இந்தப் பாடநெறியினை தயார் செய்வதற்கு உலகில் தலைசிறந்த மற்றும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட  நேர முகாமைத்துவம் சார்ந்த புத்தகங்கள் (Reference) ரெஃபரன்ஸ் ஆக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.


---------------------------------------------------------------------------------------------------------------

பெண்களுக்கா மீள் வடிவமைப்பு,

விரிவுரையாளர்

Al-Aalima Rahmath A. Razik

---------------------------------------------------------------------------------------------------------------


கற்பிக்கும் மொழி
ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் அனைவருக்கும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில்)


---------------------------------------------------------------------------------------------------------------


⏰பாடநெறியின்  கால அளவு

6 Weeks Course ( 6 வாரங்கள்)

Zoom Classes weekly once (வாரம் ஒருமுறை)


---------------------------------------------------------------------------------------------------------------


💸 கட்டணம்


10,500 LKR ( $35)

ஆனால் இந்த கட்டணத்தினை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

36 மணி நேர சமூக சேவை + உங்களுக்கு முடிந்த அளவு ஒரு கட்டணம் (குறைந்தது SL Rs 950 ),

கட்டணம் செலுத்துவதில் சிரமம் உள்ளவர்கள் இலவசமாக கற்றுக் கொள்வதற்கு எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.


---------------------------------------------------------------------------------------------------------------


பரீட்சை மற்றும் புள்ளி வழங்கும் முறை

  • Assignment (வகுப்பீடு) 90 Marks
  • குழுவாக செயற்படுதல். 10 Mark


  • Distinction: Outstanding performance (70 or above Marks)
  • Merit: Above-average performance (60-69 Marks)
  • Pass: Satisfactory performance (50-59 Marks)
  • Fail: Unsatisfactory performance (below 50Marks)


---------------------------------------------------------------------------------------------------------------


🎖சான்றிதழ்


வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.


          top
          Aalim.co (Reg: 88846)  All rights reserved 2024
          X